×

பஸ் மோதி இளம்பெண் பலி

பவானி. மார்ச் 25: சித்தோடு அருகே பஸ் மோதி இளம்பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தோடு டெலிபோன் நகர் பகுதியிலுள்ள தனியார் பள்ளி அருகே வசித்து வருபவர் குமார், இவரது மனைவி தனலட்சுமி (35). இவர் பெருமாள்மலை பகுதியிலுள்ள தனியார் கார்மெண்ட்ஸில் துணி கட்டிங் வேலைக்கு சென்று வந்தார். நேற்று வேலைக்கு செல்வதற்காக தனது பைக்கில் சென்றார்.

வாசவி கல்லூரி கேட் அடுத்துள்ள தனியார் காஸ் குடோன் அருகே வந்தபோது, பின்னால் வந்த அரசு பேருந்து, தனலட்சுமி ஓட்டிய பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். இறந்த தனலட்சுமிக்கு பிளஸ் 1 படிக்கும் மகளும், 3ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். விபத்து குறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Bhavani ,Chithode ,Kumar ,Dhanalakshmi ,Telephone Nagar ,Perumalmalai… ,
× RELATED மது விற்ற 5 பேர் கைது 67 பாட்டில்கள் பறிமுதல்