- கர்நாடக
- அவிநாசி
- பிரசாந்த்
- பாலகிருஷ்ணன்
- முருகம்பாளையம், திருப்பூர்
- செந்தில்குமார்
- முத்தனம்பலம்
- Dhanushkumar
- அமராவதி நகரம்
- பெல்லாரி மாவட்டம், கர்நாடகா
- பனியன் நிறுவனம்
- திருப்பூர்.…
அவிநாசி, மார்ச் 23: திருப்பூர் முருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரசாந்த்(30). முத்தனம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(30). கர்நாடகா மாநிலம் பெல்லாரி மாவட்டம், அமராவதி நகரைச் சேர்ந்த தனுஷ்குமார்(29). இவர்கள் 3 பேரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நாண்பர்காள மூவரும் நேற்று காரில் கோவை சென்று மீண்டும் திருப்பூர் வந்துள்ளனர்.
அவிநாசி அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னாள் சென்ற லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரை ஓட்டி வந்த தனுஷ்குமார் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் பலத்த காயமடைந்த பிரசாந்த், செந்தில்குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
