கொடுமுடி, மார்ச் 24: ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் உள்ள பல்வேறு வாக்குச்சாவடிகளை மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் பார்தி தீட்சித் நேரில் ஆய்வு செய்தார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை அவர் பார்வையிட்டார். மேலும், வாக்காளர்கள் சிரமம் இன்றி வாக்களிக்க தேவையான குடிநீர், மின்விளக்கு, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது மொடக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தியாகராஜன், கொடுமுடி தாசில்தார் கேசவமூர்த்தி மற்றும் துறை சார்ந்த அலுவலகர்கள் உடனிருந்தனர். தேர்தல் பணிகள் குறித்த தேவையான ஆலோசனைகளையும் பொது பார்வையாளர் வழங்கினார்.
