×

நத்தம் கோட்டையூரில் காளியம்மன் கோயில் திருவிழா

நத்தம், மார்ச் 25: நத்தம் அருகே கோட்டையூரில் காளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த மார்ச் 16ம் தேதி அழகர்கோவிலிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். மார்ச் 22ம் தேதி கோயில் வீட்டிற்கு காளியம்மன் சிலை கொண்டு வரப்பட்டு அங்கு கண் திறக்கப்பட்டது. பின்னர் கோயிலுக்கு மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன.

நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் மாவிளக்கு, முளைப்பாரி, அக்னி சட்டி, காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து மாலையில் பக்தர்கள் அலகு குத்தியும், குழந்தைகளுடனும் பூக்குழி இறங்கினர். அன்றிரவு மேளதாளம் முழங்க அதிர்வேட்டு, தீவட்டி பரிவாரங்களுடன் அம்மன் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு இருப்பிடம் போய் சேர்ந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோட்டையூர் கிராமமக்கள் செய்திருந்தனர்.

 

 

Tags : Kaliamman Temple Festival ,Natham Kottayur ,Natham ,Kottayur ,Alagarkoil ,
× RELATED மது பாட்டில்கள் பறிமுதல்