×

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி ஏற்காட்டில் கிராம உதவியாளர்கள் ரத்தத்தில் கையெழுத்து இயக்கம்

ஏற்காடு, பிப். 17:சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கிராம உதவியாளர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கம் இணைந்து, நேற்று ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஊழியர்களுக்கு ₹15,700 காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பொங்கல் போனஸ் ₹3 ஆயிரம் வழங்க வேண்டும்., காலிப்பணியடங்களை விரைந்து நிரப்புவதுடன், பதவி உயர்வை 20 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவில், 55 ஊழியர்கள் தங்கள் ரத்தத்தில் கையொப்பமிட்டனர். தமிழ்நாடு முழுவதும் வரும் 18 வரை நடத்தப்படும் கையெழுத்து இயக்கங்களில் பெறப்படும் மனுக்களை இனைத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வழங்கப்படும். இந்த கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட தலைவர் பாபு ஆனந்தன், மாநில குழு செயலாளர் கணேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : village assistants ,Yercaud ,
× RELATED நர்சரி கார்டனில் தீ விபத்து