×

வாலிபர் மரண வழக்கு போலீசாரிடம் விசாரணை

மதுரை: மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (24) போலீஸ் விசாரணையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பணியில் இருந்த மானாமதுரை டிஎஸ்பி ராஜா, இன்ஸ்பெக்டர்கள் திலீபன், குமாரவேல்பாண்டியன் உள்ளிட்ட 11 போலீசாரிடம், விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இதன்படி, மானாமதுரை டிஎஸ்பி ராஜாஉள்ளிட்ட 11 பேரும் நேற்று தல்லாகுளத்தில் உள்ள மதுரை சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

Tags : Madurai ,Akash Teleson ,Krishnarajapuram ,Manamadurai ,DSP ,Raja ,Thileepan ,Kumaravelpandian ,CBCID ,
× RELATED 12 வயது சிறுமிக்கு தொந்தரவு: வடமாநில வாலிபருக்கு அடி