- Hans
- ஆந்திரா
- ஆர்.கே.ஹூட்
- ஆர்.கே
- வேலத்தூர் நல்ல வீதி
- ரூ. கே. காவல்துறை
- பட்டை எஸ்ஐ முனரத்னம்
- ஆந்திரப் பிரதேசம்
- திருத்தணி
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே வெள்ளாத்தூர் கூட் சாலை பகுதியில் நேற்று மாலை ஆர்.கே.பேட்டை எஸ்ஐ முனிரத்தினம் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே ஆந்திராவில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஒரு பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். பைக்கின் பெட்ரோல் டேங்க் கவரில் மறைத்து வைத்திருந்த 15 பாக்கெட் ஹான்ஸ் போதை புகையிலை பொருள் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, போதை புகையிலையை பறிமுதல் செய்து பைக்குடன் வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தை சேர்ந்த பாபு (30) என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து போதை புகையிலை பொருட்களை தமிழக பகுதிகளுக்கு கடத்தி வந்து விற்பனை செய்து வந்திருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
