- ஐஎஸ்எல் கால்பந்து கிழக்கு
- வங்கம்
- இலக்கு மழைகள்
- கொல்கத்தா
- ISL பொருந்தி
- கிழக்கு வங்காளம்
- மோகம்மதன்
- எஸ்.சி.
- ஐ.எஸ்.எல் கால்பந்து
- சால்ட் லேக் மைதானம்
- கொல்கத்தா, கிழக்கு வங்க
கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று, ஈஸ்ட் பெங்கால் அணி, 7-0 என்ற கோல் கணக்கில் மொகம்மதன் எஸ்சி அணியை அபாரமாக வென்றது. கொல்கத்தா நகரில் சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த, ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஈஸ்ட் பெங்கால் – மொகம்மதன் எஸ்சி அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் ஈஸ்ட் பெங்கால் அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து கோல் மழை பொழிந்தனர். போட்டியின் 6வது நிமிடத்தில் அந்த அணியின் அன்வர் அலி முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார்.
பின்னர், 14வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, ஈஸ்ட் பெங்கால் வீரர் யூசப் எஜெசாரி கோலடித்தார். அதைத் தொடர்ந்து ஈஸ்ட் பெங்கால் அணி வீரர் சாவ்ல் கிரஸ்போ பெனால்டி கார்னரில் கோல் போட்டார். பின்னர், யூசப் மீண்டும் ஒரு பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக்கினார். போட்டியின் 79வது நிமிடத்தில் விஷ்ணு ஒரு கோலும், 79வது நிமிடத்தில் அன்வர் அலி மேலும் ஒரு கோலும் போட்டனர். அதேசமயம் மொகம்மதன் அணி வீரர்கள் கடினமாக முயன்றும் ஒரு கோல் கூட போட முடியாமல் தவித்தனர். போட்டியின் முடிவில் 7-0 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அபார வெற்றி பெற்றது.
