- தென்காசி
- தெற்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
- ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- தூத்துக்குடி
- கன்னியாகுமாரி
தென்காசி,மார்ச் 24: தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தென்காசி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் சார்பில் தென் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியில் தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியை தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல், கூடுதல் மாவட்ட நீதிபதி மனோஜ்குமார், தலைமை குற்றவியல் நீதிபதி கிறிஸ்டல் பபிதா, முதன்மை சார்பு நீதிபதி பிஸ்மிதா, கூடுதல் சார்பு நீதிபதி முருகவேல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஷ்குமார், நீதித்துறை நடுவர் முத்துலட்சுமி, செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிபதி குரு ஆகியோர் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினர். இப்போட்டியில் தென்காசி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் அணி முதல் பரிசும், தூத்துக்குடி மாவட்ட நீதித்துறை ஊழியர்கள் அணி இரண்டாம் பரிசும் பெற்றனர். விழாவில் நீதிபதிகள். நீதிமன்ற ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
