×

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

தர்மபுரி, மார்ச் 24: காரிமங்கலம் எஸ்ஐ மதியழகன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் சீகலஅள்ளி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறவே, அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அதில், அவரிடம் 100 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்த போது, அதே பகுதியை சேர்ந்த காஜாமணி மகன் மாதேஸ்(25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Dharmapuri ,Karimangalam ,SI Madiyalgan ,Seekalalli Lake ,
× RELATED காரில் கொண்டு சென்ற ரூ.1.97 லட்சம் பறிமுதல்