மும்பை: ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் மேலும் தீவிரமடைந்துள்ளதால் பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து வருகின்றன. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 2.6% குறைந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,837 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 72,696 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 602 புள்ளிகள் சரிந்து 22,573 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
