- Jayankondam
- ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் பள்ளி
- ராயல் நூற்றாண்டு லயன்ஸ் சங்கம்
- அரியலூர் மாவட்டம்
- இரத்த மையம்
- அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- அரியலூர்…
ஜெயங்கொண்டம், மார்ச் 23: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் மற்றும் அரியலூர் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குருதி மையம் இணைந்து ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் மாபெரும் தன்னார்வ ரத்ததான முகாம் நடைபெற்றது.
அரியலூர் மருத்துவமனை டாக்டர்.சந்திரசேகரன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் மனோகரன், ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் ஆனந்தவேல், இன்ஸ்பெக்டர் பாலாஜி, மற்றும் லயன் ராஜன், ஆகியோர் முன்னிலையில் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்டத் தலைவர் பொறியாளர் அன்பரசன், வரவேற்றார். ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருட்தந்தை ஜோசப்கென்னடி முகாமினை துவக்கி வைத்தார்.
முகாம் சிறப்பாக அமைவதற்கு ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்க நிர்வாக உறுப்பினர்கள் இயக்குனர் மற்றும் முன்னாள் தலைவர் லயன்ஸ் நிர்வாகிகள் ராஜதுரை, மதிவாணன், ரகு, வெர்ஜின் ராஜீ, சிவகுமார், தங்கதுரை, மோகன்ராஜ், ஹரிஹரன், சரவணன், பாண்டியன், ஆகியோர் ஒருங்கிணைந்து பணியாற்றினர். மேலும் முகாமில் கார்த்தி மற்றும் அமுதி உள்ளிட்ட 26 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர்.முகாமில் 26-யூனிட், ரத்தம் சேமித்து முறையாக அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு அனுப்பப்பட்டது. நிறைவாக முகாம் ஒருங்கிணைப்பாளர் லயன் மரிய கிறிஸ்துராஜ், நன்றி கூறினார்.
