×

அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்திருவிழா

அரியலூர், மார்ச் 23: அரியலூர் அருகே கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்திருவிழா வருகிற 27ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அரியலூர் அருகே உலக பிரசித்தி பெற்ற கல்லங்குறிச்சி ஸ்ரீ கலியுக வரதராஜப்பெருமாள் கோயில் பெருந்திருவிழா, வரும் மார்ச் 27ஆம் தேதி ஸ்ரீ ராமநவமியன்று கொடியேற்றத்துடன் துவக்குகிறது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் பெரும்திருவிழாவில், சேலம், விழுப்புரம், பெரம்பலூர். கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட, பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சகணக்கான பொது மக்கள் மற்றும் பக்தர்கள், திருக்கோவிலுக்கு வருகை தந்து நேர்த்திக்கடன் செலுத்தி பெருமாளை வழிபடுவது வழக்கம். இக்கோயிலின் ஆண்டு பெருந்திருவிழா வருகிற 27ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கி, பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான வெள்ளி கருட சேவை வருகிற 31ம் தேதியும்.

திருக்கல்யாண உற்சவம் மற்றும் கண்ணாடி பல்லக்கு ஏப்ரல் 2தேதியும். தேரோட்டம் ஏப்ரல் 4 தேதியும், ஏகாந்த சேவை ஏப்ரல் 5 தேதி இரவும் நடைபெறவுள்ளது. பெருந்திருவிழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெருந்திருவிழாக்கான ஏற்பாடுகளை கலியுக ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் ஆதீன பரம்பரை தர்மகர்த்தாக்கள் கமலா ராமச்சந்திர படையாட்சி, ராமதாஸ் படையாட்சி, வெங்கடாஜலபதி படையாட்சி உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

 

Tags : Kallangurichi ,Kaliyuga ,Varadaraja ,Perumal ,Temple ,Ariyalur ,Kallangurichi Kaliyuga Varadaraja Perumal Temple ,Kallangurichi Sri Kaliyuga Varadaraja Perumal Temple ,
× RELATED கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது