×

வாகன சோதனையில் ரூ.95 ஆயிரம் பறிமுதல்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 23: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தளி பேளாலம் பிரிவு சாலையில், நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கச்சுவாடி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவர் வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரப்பட்ட ரூ.95ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணத்தை தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் பழனியிடம் ஒப்படைத்தனர்.

 

Tags : Thenkanikottai ,Election Flying Squad ,Thali Pellam ,Thali ,Krishnagiri district ,Ravi ,Kachhuvadi ,
× RELATED வாக்குச்சாவடிகளில் பொது மேற்பார்வையாளர் ஆய்வு