×

சரக்கு வேன் கவிழ்ந்து 8 தொழிலாளர்கள் காயம்

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம் பங்காருபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (45). சரக்கு வேன் டிரைவரான இவர், நேற்று முன்தினம் சூளகிரி- எலசேப்பள்ளி சாலையில் சரக்கு வேனை ஓட்டி சென்று கொண்டிருந்தார். வேனில் வட மாநில தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். அந்த வேன் சிப்காட் ஜங்ஷன் பக்கமாக சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையின் சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில் வேனில் சென்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மனோசிங்(25), ராம்பிட்டி(25), சுதீஷ்(24), லக்கிராம்(19), தர்சன்(22), நரேஷ்ரானா(40), ராம்சிங்(46), தீப் கிஷோர்(24) ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சூளகிரி திருமலைகவுனிகொட்டாவில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். காயம் அடைந்த 8 பேரும், சிகிச்சைக்காக ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Krishnagiri ,Ramesh ,Bangarupet ,Kolar district ,Karnataka ,Soolagiri-Elaseppally road ,
× RELATED மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுப்பு