புழல்: பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி, வடகிழக்கு பருவமழை காரணமாக நிரம்பி வழிந்தது. படிப்படியாக நீர்மட்டம் சரிந்து வந்ததால், பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பூண்டி ஏரியிலிருந்து திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டதால், புழல் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 2652 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 18.23 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
சோழவரம் ஏரியில் இருந்து தண்ணீர் நிறுத்தப்பட்டதால், நேற்று வரை 210 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து முற்றிலுமாக நின்றது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து 182 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதேபோல, 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 538 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து இல்லை.
