×

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணை

 

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பறவை காயச்ச்ல பரவும் நிலையில் வழிமுறைகளை பின்பற்ற சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது. கிண்டி சிறுவர் பூங்காவில் உயிரிழந்த பறவைகளை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. பறவை காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். முழுமையாக சமைக்கப்படாத, சரிவர சமைக்கப்படாத முட்டை, இறைச்சி வகைகளை உண்பதை தவிர்க்க வேண்டும். இறைச்சி கூடங்களில் பணிபுரிபவர்கள் இறைச்சிக் கழிவுகளை பொதுவெளியில் கொட்டக் கூடாது. பறவை காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

Tags : Health Department ,bird ,outbreak ,Chennai ,Guindy Children's Park ,
× RELATED கம்பெனியில் பாத்திரங்கள்...