×

மதுரை திருமங்கலத்தில் அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் மர்ம நபர் புகார்

 

மதுரை: மதுரை திருமங்கலத்தில் அதிமுக சார்பில் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக தேர்தல் அதிகாரிகளிடம் மர்ம நபர் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து திருமங்கலம் குன்னத்தூரில் உள்ள ஆர்.பி.உதயகுமாரின் அலுவலகத்தில் பறக்கும் படை ஆய்வு செய்து ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினரிடமும் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்.பி.உதயகுமார் கட்டியுள்ள ஜெயலலிதா கோயிலுக்கு கட்சி நிர்வாகிகளை வரவழைத்து பணப்பட்டுவாடா செய்தாக புகார் செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் விநியோகம் தொடர்பான புகாருக்கு ஆர்.பி. உதயகுமார் திட்டவட்ட மறுப்பு தெரிவித்துள்ளார் .

Tags : Adimuga ,Madurai Thirumangala Madurai ,Madurai Thirumangala ,Thirumangalam ,R. ,Kunnathur ,UDAYAKUMAR ,R. B. ,Grand Admiral ,
× RELATED சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார...