புதுச்சேரி: புதுச்சேரி ஊசுடு தொகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சாய் சரவணனின் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்தனர். வரும் சட்டமன்ற தேர்தலில் ஊசுடு தொகுதியில் போட்டியிட சாய் சரவணனுக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தி அடைந்தனர். சாய் சரவணனின் ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தில் தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
