×

ஈரோடு மார்க்கெட்டுக்கு பலாப்பழம் வரத்து அதிகரிப்பு

 

ஈரோடு, மார்ச் 21: பண்ருட்டி மற்றும் கேரளாவில் பலாப்பழ சீசன் துவங்கியதால் அங்கிருந்து ஈரோட்டுக்கு அதிகளவில் பலாப்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தற்போது பண்ருட்டி வட்டாரத்தில் பலாப்பழம் அறுவடை சீசன் துவங்கியுள்ளதால், ஈரோடு மார்க்கெட்டிற்கு பலாப்பழம் வரத்து அதிகளவில் உள்ளது. மார்க்கெட் பகுதியில் உள்ள பழ மண்டிகளில் பண்ருட்டி பலாப்பழங்கள் 5 கிலோ முதல் 30 கிலோ எடை வரையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தேர்வு செய்து தங்களுக்கு பிடித்தமான பழத்தை வாங்கிச் செல்கின்றனர். மேலும், மாவட்ட முழுவதும் உள்ள சில்லரை வியாபாரிகள் இங்கிருந்து பலாப்பழத்தை வாங்கிச்சென்று சில்லரை விற்பனைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

Tags : Erode Market ,Erode ,Panruthi ,Kerala ,Panruti ,
× RELATED அட்டப்பாடி வனப்பகுதிக்குள் கஞ்சா செடிகள் தீ வைத்து அழிப்பு