×

அத்தியாவசிய பணியாளர்கள் தபால் வாக்களிக்கும் படிவத்தை 30ம் தேதிக்குள் வழங்க அறிவுறுத்தல்

 

ஈரோடு, மார்ச் 21: தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நாளன்று, அத்தியாவசிய பணிகளுக்காக பணியமர்த்தப்படும் பணியாளர்கள், தங்கள் வாக்கினை வாக்குச்சாவடிக்கு சென்று நேரில் செலுத்த இயலாது. அவ்வாறான பணியாளர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு மூலம் செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தென்னக ரயில்வே, அகில இந்திய வானொலி நிலையம், கடல், விமானம், தகவல் தொழில் நுட்பம், அனைத்து வகை ஊடக துறையினர், சென்னை மெட்ரோ ரயில், அரசு போக்குவரத்து கழகம், மின் விநியோகம், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை, சிறைத்துறை, போக்குவரத்து போலீஸ் சார்ந்த பணியாளர்கள் தபால் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்.
இவர்கள், ‘படிவம் 12டி’ பூர்த்தி செய்து, வாக்காளர் அடையாள அட்டை நகல், சம்மந்தப்பட்ட நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி சான்றிதழ் நகல் ஆகியவற்றை வரும் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்க வேண்டும். படிவம்-12டி வழங்கியோருக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கப்படும். இதுபோன்ற துறைகளில் ஒரு பணி ஒருங்கிணைப்பாளரை நியமித்து, அதற்கான உத்தரவு நகலை சமர்பிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.

Tags : Erode ,Tamil Nadu ,Election Commission ,Erode… ,
× RELATED இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை