×

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

 

ஈரோடு, மார்ச் 18: ஈரோட்டில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் நேற்று மாலை தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கந்தசாமி தொடங்கி வைத்தார். இப்பேரணியானது, பன்னீர்செல்வம் பூங்கா சந்திப்பு, திருவேங்கடசாமி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் நகர் வழியாக மீண்டும் மாநகராட்சி அலுவலத்தில் நிறைவடைந்தது.

Tags : Election Awareness Rally ,Erode ,Tamil Nadu ,
× RELATED முனியப்பசாமி கண் திறப்பு விழா