திருப்பூர், மார்ச் 21: தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் பணிகளை பார்வையிடும் பொருட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு 10 தேர்தல் பார்வையாளர்கள் (பொது பார்வையாளர் 4, செலவின பார்வையாளர் 5 மற்றும் காவல் பார்வையாளர் 1 இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பிற தொகுதிகளுக்கான தேர்தல் பார்வையாளர்கள் கடந்த 18ம் தேதி வந்துள்ள நிலையில் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர் சுனில் என் ரனோட் தற்போது வருகை புரிந்துள்ளார். அவரை 97903 05078 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், திருப்பூர் கலெக்டர் அலுவலக பொதுப்பணித்துறை மாளிகை அறை எண் 6ல் தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை சந்திக்கலாம். இந்த நேரத்தில் அரசியல் கட்சியினர் நேரில் சென்று தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். என கலெக்டர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
