×

பனியன் தொழிலாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்வு

 

திருப்பூர், மார்ச் 18: திருப்பூரில் பனியன் தொழிலாளர்களுக்கு 33 சதவீத ஊதிய உயர்த்தி வழங்குவது என உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையே நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் திருப்பூரில் பிரதானமானதாக இருந்து வருகிறது. இங்குள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுக்கு 4 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு ஒப்பந்தம் உருவாக்கப்படுகிறது. தொழிற்சங்கங்களும், உற்பத்தியாளர் சங்கங்களும் 4 ஆண்டுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளருக்கு சம்பள உயர்வை நிர்ணயித்து, ஒப்பந்தம் செய்கின்றன. முந்தைய ஒப்பந்த காலம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், தற்போதுள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு, பஞ்சப்படி, புதிய ஒப்பந்தம், வாடகைப்படி, குடும்ப நல உதவித்தொகை, திருமண உதவித்தொகை, ஓவர் டைம் பேட்டா உள்ளிட்டவை தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Tags : Tiruppur ,Manufacturers Association ,Tiruppur… ,
× RELATED சிபிஎஸ்இ பள்ளியில் “ஸ்பார்க் அப் 26” விழா