×

சிபிஎஸ்இ பள்ளியில் “ஸ்பார்க் அப் 26” விழா

 

திருப்பூர், மார்ச் 17: திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தீரன் சின்னமலை இன்டர்நேஷனல் (சிபிஎஸ்இ) பள்ளியில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நோக்கில் “ஸ்பார்க் அப் 26” விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருப்பூர், மங்கலம், அவினாசி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சிறுவர்கள், சிறுமிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திருக்குறள் ஒப்புவித்தல், பெஸ்ட் அவுட் ஆஃப் வேஸ்ட், போஸ்டர் மேக்கிங், டிரா அண்டு கலர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.

 

Tags : Spark Up 26 ,CBSE ,Tiruppur ,Theeran Chinnamalai International ,CBSE) School ,Vanchipalayam ,Mangalam ,
× RELATED 12ம் வகுப்பு மாணவனை தாக்கிய 4 பேர் கைது