×

ராணுவ பீரங்கியை இயக்கிய வட கொரிய தலைவரின் 13 வயது மகள்

சியோல்: வட கொரியாவில் நடந்த ராணுவ பயிற்சியின் போது அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் ராணுவ பீரங்கியை இயக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் வாரிசாக அவரது மகள் கிம் ஜு ஏ பரவலாகக் கருதப்படுகிறார். தற்போது சுமார் 13 வயதாகும் இவர் முக்கிய ராணுவ நிகழ்வுகளில் தந்தையுடன் கலந்துகொண்டு, வாரிசாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார். வட கொரிய தலைநகர் பியாங்யாங்கில் நேற்றுமுன்தினம் நடந்த ராணுவ பயிற்சியை கிம் ஜாங் உன் பார்வையிட்டார். அதை தொடர்ந்து காலால் படையின் போர் உத்திகள் குறித்த பயிற்சி நேற்று நடந்தது.

இந்த பயிற்சியின் போது கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜூ ஏ ராணுவ பீரங்கியை இயக்கினார். அவர் அருகில் ஒருபுறம் கிம் ஜாங் அமர்ந்திருந்தார். இன்னொருபுறம் ராணுவ வீரர்கள் அமர்ந்துள்ளனர். இது குறித்த படங்கள்,வீடியோக்கள் வட கொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. வடகொரிய அரசு ஊடகங்கள் இவரை மதிப்புமிக்க குழந்தை எனக் குறிப்பிடுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாவிட்டாலும், இவரே அடுத்த தலைவர் என சர்வதேச நிபுணர்களால் பரவலாகக் கணிக்கப்படுகிறது.

Tags : Seoul ,Kim Jong-un ,
× RELATED ஈரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் மீது இஸ்ரேல் தாக்குதல்!!