×

4,000 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் ஐ.ஆர்.பி.எம் ஏவுகணைகள் ஈரான் கைவசம் : அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் அதிர்ச்சி

தெஹ்ரான் : ஈரான் இன்று டியாகோ- கார்சியாவில் உள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தை தாக்கியது மிரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியாவில் அமைந்துள்ள அமெரிக்க – பிரிட்டன் கூட்டு ராணுவத் தளத்தின் மீது ஈரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 4,000 கி.மீ தூரமுள்ள இலக்கை தாக்கும் ஐ.ஆர்.பி.எம் ஏவுகணைகள் ஈரான் கைவசம் உள்ளதால் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கொராம்ஷகர் 4 வகை IRBM ஏவுகணைகளை டியாகோ கார்சியாவை தாக்க ஈரான் பயன்படுத்தி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. க்ளஸ்டர் குண்டுகளை (கொத்து குண்டு) சுமந்து செல்லும் கொரம்ஷகர் IRBM ஏவுகணைகள் பேரழிவை ஏற்படுத்தக்கூடியவை. IRBM ஏவுகணைகள் வசமுள்ளதால் அனைத்து நேட்டோ நாடுகளும் ஈரான் தாக்குதல் எல்லைக்குள் உள்ளது. அதே போன்று பாரீஸ், லண்டன் போன்ற ஐரோப்பிய நகரங்கள் ஈரான் தாக்குதல் எல்லைக்குள் உள்ளது. ஈரானின் 2 IRBM ஏவுகணைகளும் தடுத்து அழிக்கப்பட்டாலும் ஏவுகணை வீசப்பட்டதுதான் அந்நாடு உலகுக்கு சொல்லும் செய்தி. ஏற்கனவே அமெரிக்காவின் அதிநவீன எஃப்- 35 போர் விமானங்களை ஈரான் தாக்கி அழித்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags : Iran ,America ,Europe ,TEHRAN ,US ,TIAGO- GARCIA ,UK ,Diego Garcia ,Indian Ocean ,
× RELATED 20 லிட்டர் மினரல் வாட்டர் கேன் விலை ரூ....