×

சேலம் புது பஸ் ஸ்டாண்டில் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் டி.எம்.செல்வகணபதி அறிக்கை

சேலம், பிப். 16: சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலம் மேற்கு மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம், இன்று (16ம் தேதி) காலை 10.30 மணிக்கு சேலம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கலைஞர் மாளிகை, வீரபாண்டியார் அரங்கில் நடக்கிறது. கூட்டத்திற்கு, மாவட்ட அவைத்தலைவர் கோபால் தலைமை வகிக்கிறார். இதில், சேலம் மேற்கு மாவட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற சுற்றுப்பயணம் குறித்தும், கழக ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

எனவே, இக்கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, நெசவாளர் அணி உள்ளிட்ட சார்பு அணிகள் மற்றும் ஆதி திராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : West District DMK Emergency Executive Committee Meeting ,
× RELATED தகராறு செய்த 4 பேர் கைது