×

பாலக்காட்டில் 31ம் தேதி பாடகர் எஸ்பிபி சிலை திறப்பு

பாலக்காடு, மார்ச் 20: பாலக்காடு வி.டி. பட்டதிரிபாட் நினைவிடத்தில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உருவச்சிலை திறப்புவிழா வருகிற 31ம் தேதி நடைபெறவுள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உருவச்சிலையை ஆஸ்கார் விருது பெற்ற இசை அமைப்பாளர் கீரவாணி திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர்களான ஹரிகரன், கே.எஸ்.சித்ரா, சுஜாதா மோகன், மனோ, கங்கை அமரன், உன்னிமேனன், னிவாஸ் ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

தொடர்ந்து விழாவில் கே.எஸ்.சித்ரா, சுஜாதா மோகன், மனோ, உன்னிமேனன், னிவாஸ், விஜய் யேசுதாஸ், மது, பாலகிருஷ்ணன், பிஜூமேனன், சிதாரா கிருஷ்ணகுமார், ராஜலட்சுமி, சுதீப்குமார், தேவாநந்த், அப்ஷல், நிஷாத், சித்ரா அருண், மஞ்சு மேனன் உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பலர் பாடுகின்றனர். பாலக்காடு மாவட்ட பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்ரணியத்தின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது. சமம் அமைப்பின் தலைவர் சுதீப்குமார் தலைவராகவும், ஸ்வரலயா செயலாளர் டி.ஆர்.அஜயன் பொது ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், 250 பேர் அடங்கிய ஏற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டது.3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்கான அரங்கும், பார்வையாளர்கள் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளதாக சமம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : SPB ,Palakkad ,D. ,Graduation Memorial ,S. B. ,Balasubramaniam ,Keravani ,
× RELATED சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் 14 காட்டு யானைகள் முகாம்