×

2 நாட்களில் ரூ.15.72 லட்சம் பறிமுதல்

 

ஊட்டி, மார்ச் 18: நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மேற்கொண்ட வாகன சோதனையில் 2 நாட்களில் ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது.
சட்டமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுத்திடும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர் மற்றும் கூடலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா 3 என மொத்தம் 9 பறக்கும் படைகள், 9 நிலை மற்றும் நகரும் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இக்குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இக்குழுவினர் கடந்த 2 நாட்களாக நடத்திய சோதனையில், மொத்தம் 12 பேரிடம் இருந்து ரூ.15 லட்சத்து 72 ஆயிரத்து 450 பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Ooty ,Election Flying Squad ,Nilgiris district ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் 12...