பந்தலூர்,மார்ச்18: பந்தலூர் அருகே சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் தேயிலைத்தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் நீர் மற்றும் உணவுகள் இல்லாமல் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை ஒட்டி வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்கள் அச்சுறுத்தி வருவதோடு விவசாய பயிர்களையும் சேதம் செய்து வருகின்றன. வனத்துறையினர் காட்டு யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் சேரம்பாடி வனச்சரகம் சேரம்பாடி காப்பிக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக யானைகள் முகாமிட்டுள்ளன.
