×

மசினகுடி ஈசான்ய லிங்கேஸ்வரர் கோயிலில் 108 சங்கு அபிஷேகம்

 

ஊட்டி, மார்ச் 18: மசினகுடி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஈசான்ய லிங்கேஸ்வரர் கோயிலில் 108 சங்குகளுடன் முதலாம் ஆண்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றது.
மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் ஈசான்ய லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த கோயிலில் கருணாம்பிகை அம்மன் ஈசான்ய லிங்கேஸ்வரருடன் அருள்பாலிக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட்ட நிலையில ்விசேஷ நாட்கள் மட்டுமின்றி நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால் மசினகுடி, மாயார், மாவனல்லா, ஊட்டி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த பக்தர்கள் தினந்தோறும் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

Tags : Masinakudi Isanya Lingeswarar ,Temple ,Isanya Lingeswarar Temple ,Masinakudi ,Mayar ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் 12...