×

900 கோல்கள் மெஸ்ஸி சாதனை

ஃபோர்ட் லாடர்டேல்: கான்காகேஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் நாஷ்விலி அணிக்கு எதிராக ஆடிய இன்டர் மயாமி அணியின் கேப்டனான அர்ஜென்டினா ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, போட்டியின் 7வது நிமிடத்தில் அட்டகாசமாக ஒரு கோல் போட்டார். அப்போட்டி டிராவில் முடிந்தது. அந்த கோல் மூலம், அதிகாரப்பூர்வ கால்பந்து போட்டிகளில் 900 கோல் அடித்த 2வது வீரரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். மேலும், கால்பந்தாட்ட வரலாற்றில், 900 கோல்களை குறைந்த போட்டிகளில் அடித்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது. இந்த பட்டியலில் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 965 கோல்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

Tags : Messi ,Fort Lauderdale ,Lionel Messi ,Inter Miami ,Nashville ,CONCACAF Championship football match ,
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: அசராத சபலென்கா...