×

சில்லி பாய்ன்ட்…

* மேல்முறையீடு செய்ய செனகல் அணி முடிவு
ஜெனீவா: ஆப்ரிக்க நாடுகள் இடையே நடந்த ஆப்கோன் கால்பந்து இறுதிப் போட்டியின்போது, நடுவரின் அனுமதியின்றி களத்தில் இருந்து வெளியேறிய செனகல் அணியிடம் இருந்து சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டு, மொரோக்கோ அணியிடம் அப்பட்டம் அளிக்கப்பட்டது. இது, கால்பந்து அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தங்களிடம் இருந்து சாம்பியன் பட்டம் பறிக்கப்பட்டதை எதிர்த்து ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பிடம் (சிஏஎப்) மேல் முறையீடு செய்ய செனகல் கால்பந்து கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

* 10,000 மீட்டர் ஓட்டம் கலக்குவாரா குல்வீர்?
பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூரு நகரில், வரும் 29ம் தேதி டிசிஎஸ் உலக 10,000 மீட்டர் ஓட்ட போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, ரூ. 2 கோடி மொத்த பரிசு வழங்கப்பட உள்ளது. ஆடவர், மற்றும் மகளிர் பிரிவில் முதலிடம் பெறுவோருக்கு தலா, ரூ.25 லட்சம் பரிசு கிடைக்கும். இப்போட்டிகளில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு, நடப்பு ஆசிய சாம்பியன் மற்றும் தேசிய சாதனையாளரான குல்வீர் சிங் தலைமை தாங்குவார் என தகவல் வெளியாகி உள்ளது. இம்மாதம் நியூயார்க் நகரில் நடந்த ஹாஃப் மாரத்தான் போட்டியில் குல்வீர் சிங் 3ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

* துவக்க வீரராக சிஎஸ்கேவில் சாம்சன்
சென்னை: ஐபிஎல்லில் ஆடிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் துவக்க வீரர்களாக, ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே களமிறங்கி வந்தனர். தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து, ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன் ஆகியோருக்கு மாற்றாக பெறப்பட்டு அணியில் சேர்க்கப்பட்ட அதிரடி வீரர் சஞ்சு சாம்சன், துவக்க வீரராக ஆடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதனால், ஆயுஷ் மாத்ரே அடுத்த இடத்தில் ஆடுவார் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு ஐபிஎல்லில், ஆயுஷ் மாத்ரே 7 போட்டிகளில் ஆடி, 240 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Senegal ,Geneva ,Afcon football ,Morocco ,
× RELATED நடப்பாண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட்...