×

மியாமி டென்னிஸ் தொடர்: சபலென்கா, ரைபகினா அரையிறுதிக்கு தகுதி

மியாமி: அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட இந்த தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை கடந்த 4வது கால்இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீராங்கனையுமான பெலாரசின் 27 வயதான அரினா சபலென்கா, 24 வயதான அமெரிக்காவின் ஹெய்லி பாப்டிஸ்ட்டுடன் மோதினார். இதில் 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் சபலென்கா வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.

முன்னதாக நடந்த மற்றொரு கால்இறுதியில் 3ம் ரேங்க் வீராங்கனையான கஜகஸ்தானின் 26 வயதான எலினா ரைபகினா, 5வது ரேங்க்கில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார். இதில் 2-6,6-3,6-4 என ரைபகினா வெற்றிபெற்றார். நாளை காலை அரையிறுதியில் சபலென்கா-ரைபகினா, அமெரிக்காவின் கோகோ காப்- செக்குடியரசின் முச்சோவா மோதுகின்றனர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்த முதல் கால்இறுதியில் 24 வயதான செக்குடியரசின் ஜிரி லெஹெக்கா, 7-6,7-5 என்ற செட் கணக்கில், ஸ்பெயினின் மார்ட்டின் லண்டலூசை வென்றார். மற்றொரு போட்டியில், பிரான்சின் ஆர்தர் ஃபில்ஸ், 6-7,7-6,7-6 என அமெரிக்காவின் டாமி பாலை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

Tags : Miami Tennis Series ,Sabalenka ,Raibakhina ,Miami ,Miami Open ,United States ,Belarus ,
× RELATED பிட்ஸ்