×

சாம்பியன்ஸ் மகளிர் கால்பந்து: பேரிடியாய் பேயர்ன் வீழ்ந்தது மான்செஸ்டர்

டிராஃபோர்ட்: யுஇஎப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் நேற்று, பேயர்ன் அணி, 3-2 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் அணியை வீழ்த்தியது. யுஇஎப்ஏ மகளிர் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. டிராஃபோர்ட் நகரில் நேற்று நடந்த காலிறுதிப் போட்டியின் முதல் நிலை ஆட்டத்தில் பேயர்ன் மியுனிச் அணியும், மான்செஸ்டர் யுனைடெட் அணியும் மோதின. போட்டி துவங்கியது முதல் இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர். போட்டியின் 2வது நிமிடத்தில் பேயர்ன் அணியின் பெர்னில் ஹார்டர் அட்டகாசமாக பந்தை கடத்திச் சென்று தனது அணிக்காக முதல் கோல் போட்டு அசத்தினார்.

24வது நிமிடத்தில் மான்செஸ்டர் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்திய மாயா லெ டிஸியர் அணியின் முதல் கோல் போட்டார். பின்னர், போட்டியின் 2வது பாதியில் பேயர்ன் அணியின் ஹார்டர் மீண்டும் ஒரு கோல் போட்டு அசத்தினார். அதற்கு பதிலடியாக, மான்செஸ்டரின் ஹன்னா லுன்ட்க்விஸ்ட் 76வது நிமிடத்தில் அணியின் 2வது கோல் போட்டு சமநிலைக்கு கொண்டு வந்தார். இருப்பினும், கடைசி கட்டத்தில் சிறப்பாக ஆடிய பேயர்ன் அணியின் மொமோகோ தனிகவா, 84வது நிமிடத்தில் அணியின் 3வது கோல் போட்டு கரவொலி பெற்றார். அதன் பின் கோல் விழாததால், 3-2 என்ற கோல் கணக்கில் பேயர்ன் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

Tags : Champions women's football ,Bayern ,Manchester ,Trafford ,UEFA Women's Champions League ,-finals ,UEFA Women's Champions League football ,England ,
× RELATED நடப்பாண்டின் ஐ.பி.எல் கிரிக்கெட்...