கோவை: கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், கூட்டணி கட்சியினர், அதிமுக எம்எல்ஏக்கள் என பலர் பங்கேற்றனர். ஆர்பாட்டத்தில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘தமிழ்நாட்டில் முழு நேர டிஜிபி நியமிக்க வேண்டும். உங்கள் ஓட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் இருக்க வேண்டும்.
புதுசா வருபவர்கள் பற்றி நான் பேச விரும்பவில்லை. கடந்த 5 ஆண்டில் 65,518 கிலோ கஞ்சா பிடித்துள்ளனர். 8,025 கிலோ போதை பொருள் பிடிக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக மாற்ற வேண்டும். அதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
