×

திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?

சென்னை : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதோடு 5 மாநிலங்களுக்கும் ஒரே கட்டமாக மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து வரும் நிலையில், இதுவரை திமுக கூட்டணியில் உள்ள 6 கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளன.

அதன் விவரம் வருமாறு :

1. காங்கிரஸ் – 28 தொகுதிகள்

2. ம.தி.மு.க. – 4

3. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி – 2 தொகுதிகள்

4. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 2 தொகுதிகள்

5. மனிதநேய மக்கள் கட்சி – 2 தொகுதிகள்

6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி – 5

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் இதுவரை 43 தொகுதிகள் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மதிமுக 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா 2 தொகுதிகள் என 7 தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

Tags : DIMUKA ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள்...