×

புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை

புதுச்சேரி : புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026, புதுச்சேரியில் வரும் 09.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்திட இம்மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தலின் போது வெடிபொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும், பொது அமைதி மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், இந்திய வெடிபொருள் சட்டம் மற்றும் விதிகளின்படி புதுச்சேரி மாவட்டத்தில் பட்டாசு தயாரிப்பதற்கும், வைத்துக்கொள்வதற்கும் மற்றும் விற்பதற்கும் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும், (1) 07.04.2026 முதல் 10.04.2026 வரை மற்றும் (ii) 02.05.2026 முதல் 05.05.2026 வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேற்குறிய பட்டாசு/வெடிமருந்து நாட்களில் பட்டாசு/வெடிமருந்து தயாரித்தல், சேமிப்பு கிடங்குகள் மற்றும் பட்டாசு/வெடிமருந்து விற்பனை கடைகள் திறப்பதற்கும் மற்றும் இயங்குவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆணையினை மீறுவோரின் உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்றும் மற்றும் உரிய சட்டவிதிமுறைகளின் தண்டிக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகிறது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry ,Puducherry Assembly Election 2026 ,
× RELATED தஞ்சை அருகே சாலியமங்கலத்தில்...