- முதல்வர்
- Saliyamangalam
- தஞ்சாய் கே.
- ஸ்டாலின்
- தஞ்சை
- தஞ்சாய் கே.
- தமிழ்நாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல்
- காங்கிரஸ்
- பாஜக
- திமுக தேர்தல்
தஞ்சை: தஞ்சை அருகே சாலியமங்கலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாகனத்தில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ், பாஜக தவிர மற்ற கட்சிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். திமுக தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அண்மையில் வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் கட்டமாக தனது சொந்த ஊரான திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இன்று மாலை நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து வியானம் மூலம் தஞ்சாவூர் சென்ற முதலமைச்சர் பிரச்சார வேனில் திருவாரூர் நோக்கி பயணம் மேற்கொண்டார். திருவாரூர் நோக்கி சென்று கொண்டிருந்த முதலமைச்சரின் பிரச்சார வேனை வழிமறித்து பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
முதலமைச்சர் அமர்ந்திருந்த முன்பகுதி கதவை திறந்து வேனில் ஏதும் இருக்கிறதா? என்று சோதனை நடத்தினார்கள். வேனின் பின்பகுதி கதவையும் திறந்து சோதனை நடத்தினார்கள். முதலமைச்சரின் வாகனத்தில் எதுவும் இல்லாததால் சோதனைக்கு பிறகு முதலமைச்சரின் வாகனத்தை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர்.
