×

24 , 48 மணி நேரம் டெலிவரி உத்தரவாதம் தபால் துறையில் 3 ப்ரீமியம் சேவைகள் அறிமுகம்

புதுடெல்லி: அவசரமாக அனுப்பப்பட வேண்டிய சரக்குகளுக்காக 24 மணி நேரம் மற்றும் 48 மணி நேர விநியோக உத்தரவாதத்துடன் ப்ரீமியம் சேவைகளை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது. தபால் துறை சார்பில் 3பிரீமியம் சேவைகள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்த சேவையை தொடங்கி வைத்தார். 24 ஸ்பீட் போஸ்ட், 24ஸ்பீட் போஸ்ட் பார்சல், 48 ஸ்பீட் போஸ்ட் ஆகிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. முதல் கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய ஆறு நகரங்களில் இந்த சேவை அறிமுகம் செய்யப்படுகின்றது. விநியோக காலக்கெடுவை கடைப்பிடிப்பதற்காக இந்த துறையானது பிரத்யேக விமான போக்குவரத்தை பயன்படுத்தும். இந்த சேவை மூலமாக இ-காமர்ஸ் சந்தையானது தற்போதுள்ள ரூ.11லட்சம் கோடியில் இருந்து கிட்டதட்ட மூன்று மடங்காக உயரும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags : New Delhi ,
× RELATED விடுப்பு மறுக்கப்பட்டதால் வங்கி...