×

அம்பை தொகுதியில் ரூ.2500 கோடியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள்

விகேபுரம், மார்ச் 18: அம்பை சட்டமன்றத் தொகுதியில் ரூ.2500 கோடிக்கு மேல் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான இசக்கி சுப்பையா தெரிவித்துள்ளார். அம்பை சட்டமன்ற தொகுதி மக்களுக்கு 10 ஆண்டுகள் தான் ஆற்றிய சேவைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்வுமான இசக்கிசுப்பையா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘கடந்த 2011ம் ஆண்டில் இருந்து 2016 வரையில் அம்பை சட்டமன்ற தொகுதி உறுப்பினராகவும், பின்னர் அதே தொகுதியில் 2021 முதல் 2026 வரை 2வது முறையாக எம்எல்ஏ ஆகவும் இருந்து மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன். குறிப்பாக அம்பை சட்டமன்ற தொகுதியில் ரூ.2500 கோடிக்கு மேல் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளேன்’’ என்றார்.

இதுகுறித்து சிவந்திபுரம் பகுதி மக்கள் கூறுகையில் ‘‘இசக்கிசுப்பையா எம்எல்ஏ கடந்த 2011ம் ஆண்டில் அமைச்சராக இருந்தபோது சிவந்திபுரம் பகுதியில் வசிப்போர் அனைவருக்கும் பட்டா வாங்கி கொடுத்துள்ளார். அம்பை தொகுதி மட்டுமல்லாது நெல்லை மாவட்டத்தின் எந்தவொரு பகுதியில் உள்ள கோயிலில் அன்னதானம் நடத்த கேட்டு வரும் மக்களுக்கும் உடனடியாக தனது சொந்தச் செலவில் அன்னதானத்திற்கு வேண்டியதை செய்து வருகிறார். அவர் தனது சொந்தச் செலவில் விதவைகளுக்கு தையல் மிஷின், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, உடல்நலம் குன்றியவர்களின் மருத்துவத்திற்கு தேவையான நிதியுதவியும் வழங்கி வருகிறார்’’ என்றனர்.

Tags : Ambai ,Vikepuram ,Former ,AIADMK ,minister ,MLA ,Isakki Subbaiah ,Ambai assembly ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்