×

பண்ருட்டியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

பண்ருட்டி, மார்ச் 18: கடலூர் மாவட்டம் பண்ருட்டி செட்டி பட்டறை காலனி சுடுகாடு அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார், அந்தப் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது பண்ருட்டி பல்லவராயன் நத்தம் மாதா கோவில் தெருவை சேர்ந்த சிபிராஜ்(22), பிரதீப் ராஜ்(21), செட்டி பட்டறை காலனி விஜய் (25) ஆகிய மூவரும் கஞ்சாவை வைத்துக்கொண்டு அவ்வழியாக வருபவர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து, 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Panruti ,Panruti police ,Chetty Workshop Colony crematorium ,Panruti, Cuddalore district ,DSP ,Raja ,Inspector ,Baskaran ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்