×

பெண் அலறியடித்து ஓட்டம் வீட்டிற்குள் புகுந்த 6 அடி சாரை சிக்கியது

 

திருச்சுழி, மார்ச் 18: திருச்சுழி அருகே வீட்டிற்குள் புகுந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.
திருச்சுழி அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் வசிப்பவர் ரோகிணி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்து விட்டது. இதை பார்த்த ரோகிணி உடனடியாக அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார். திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருச்சுழி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் ரோகிணியின் வீட்டிற்குள் புகுந்த சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை பத்திரமாக கொண்டு போய் காட்டுப்பகுதியில் உயிருடன் விட்டனர்.

Tags : Tiruchi ,Rohini ,Tiruchi Government Hospital ,
× RELATED உரிய ஆவணம் இல்லாத ரூ.4.92 லட்சம் பறிமுதல்