×

கூடலூர்,நாடுகாணியில் வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

கூடலூர்,மார்ச்16: கூடலூரை அடுத்த நாடுகாணி தாவர மரபியல் பூங்கா மற்றும் கூடலூர் பஜாரில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட புலிகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. தாவர மரபியல் பூங்கா வளாகத்தில் இருந்து கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நாடுகாணி பஜார் வழியாக தபால் நிலயை பகுதி வரை சென்று மீண்டும் தாவர மரபியல் பூங்கா வளாகத்தில் முடிவடைந்தது.

இதனையடுத்து கூடலூர் நகர் செம்பாலா பகுதியில் துவங்கி துப்புகுட்டி பேட்டை,பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்தில் இரண்டாவது பேரணி முடிவடைந்தது. பேரணிகளை கூடலூர் மாவட்ட வன அலுவலர் தேவராஜ் மற்றும் மாவட்ட எஸ்பி நிஷா ஆகியோர் துவக்கி வைத்து கலந்து கொண்டனர். பேரணியில் புலிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

 

Tags : Koodalur, Nadakani ,KUDALUR ,NADAKANI PLANT GENETICS PARK ,KOODALUR BAZAAR ,KOODALUR ,
× RELATED ஊட்டி முழுவதும் சுற்றுலா பயணிகள்...