- முதல் அமைச்சர்
- ஓகன்னா
- சிவப்பு ஆடு
- கோபி
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- தவேகா உயர் மட்ட நிர்வாகக் குழு
- கோபி
- கே. ஏ. செங்கோட்டையன்
- தவேகா
கோபி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோபி தொகுதியில் தவெக உயர்மட்ட நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தேர்தல் பரப்புரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: தவெகவை கூட்டணியில் சேர்க்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் விஜய்யை முதலமைச்சராக ஏற்றுக்கொள்பவர்களுடன்தான் கூட்டணி. வரும் சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் வடக்கு தொகுதியில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சத்தியபாமா போட்டியிட உள்ளார் என்றார்.
கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் இன்று காலை நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையில் விஜய் உரிய பதிலை அளித்து உள்ளார். முதல்வராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து உள்ளார் என்றார். என்டிஏ கூட்டணியில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் குறித்த கேள்விக்கு, ‘‘விஜய் முதல்வராக வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார். எனவே துணை முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.
