1. மனைவி சங்கீதா விவகாரத்து கேட்ட நிலையில், திரிஷாவுடன் மேட்சிங் டிரஸ்சில் விஜய் ஜோடியாக வந்ததை தவெக தொண்டர்கள் எப்படி பார்க்கிறார்கள்? இவ்வளவு நாள் எல்லாத்துக்கும் முட்டுக்கொத்தோம். இதுக்குமேல் முட்டுக்கொடுக்க முடியாது என நீங்கள் உட்பட பல ரசிகர்கள் பொங்கி இருக்கிறார்களே?
கட்சியின் ஆரம்ப கட்டத்தில் விஜய் சில தவறுகளைச் செய்வது இயல்புதான் என நினைத்தேன். ஆனால் அது காலப்போக்கில் மாறிவிட்டது. மேடைகளில் மற்ற நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது ஒரு குறையாகப் பார்க்கப்படுகிறது. ஒரு தலைவர் மட்டும் வளர்ந்தால் போதாது, அவரைச் சுற்றியுள்ள தொண்டர்களும் நிர்வாகிகளும் வளர வேண்டும். அவர்களுக்கு மேடையில் உரிய மரியாதை கொடுத்தால்தான் மக்களிடம் செல்வாக்கு கிடைக்கும். கட்சியின் மாநாட்டில் உயிரிழந்தவர்களுக்கு அல்லது விபத்தில் சிக்கியவர்களுக்கு விஜய் நேரில் சென்று உதவிகளைச் செய்திருக்கலாம் அல்லது மேடையில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளித்திருக்கலாம். சினிமாவில் விஜய்யை அதிரடித் தலைவராகப் பார்த்த மக்கள், அரசியலிலும் அவர் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவ்வாறு அவர் இல்லை. குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை அவர் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
2. தவெக தலைவர்கள் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுகின்றனர். ஆனால், பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் டார்ச்சரால் தவெக பெண் நிர்வாகிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்? இதை பற்றி உங்கள் கருத்து?
இது ரொம்ப அபாயகரமான ஒரு விஷயமா பார்க்கிறேன். பெண் நிர்வாகிகள், வெளியில தெரிஞ்சு ஒருத்தர் ரெண்டு பேர் உங்களுக்கு தெரியலாம். உள்ளுக்குள்ள இருக்கும்போது எனக்கு தெரிஞ்சு இன்னும் நிறைய பேர் இருக்காங்க. நிறைய பேர் மன உளைச்சலில் உள்ளார்கள். பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் கட்சியில் உள்ள பெண் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தலைவர் விஜய்யுடன் போட்டோ எடுக்க வைக்கிறேன், உள்ளே அழைத்துச் செல்கிறேன் என்று கூறி பெண்களை சிலர் தவறாகப் பயன்படுத்த முயல்கின்றனர். இதுகுறித்து மேலிடத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. மாறாக புகார்களைப் புறக்கணிக்கும் சூழலே நிலவுகிறது. கட்சியின் தொடக்கக் காலத்தில் இத்தகைய தவறுகள் நடப்பது இயல்பு என்று பொறுத்துக் கொண்டாலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகிகளின் மரியாதை கேள்விக்குறியாவதை இனி சகித்துக் கொள்ள முடியாது.
3. போதை ஒழிப்பு பற்றியும் தவெக தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால், சிபிஐ விசாரணைக்கு டெல்லி செல்லும்போதும் ஆதவ் அர்ஜூனா மதுபாட்டிலை எடுத்து சென்றதால், தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல், தவெக ஆர்ப்பாட்டத்தில் நிறைய பேர் போதையில் தான் ரகளை செய்து உள்ளனர்? இதுதான் போதை ஒழிப்பு முன்னெடுப்பா?
நான் எதிர்க்கிற ஒரே விஷயம் இதுதாங்க. நம்ம என்ன பேசுறோமோ அதை செயல்ல காட்டணும். நான் பார்த்து தலைவர் விஜய், கூலிப் (Cool Lip) போட்டுட்டு தான் மேடைக்கு போறாரு. அவர் கூலிப் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தினால்தான் அவரால மேடைக்கே போக முடிகிறது. குடி பழக்கம் இல்லாமல் அவரால் விமானத்தில் கூட பயணம் செய்ய முடியாத சூழல் உள்ளது. ஏன் இத கூட மாற்றிகொள்ள முடியாமல் இவ்வளவு ஒரு கேர்லெஸ்னஸ்? போதைய ஒழிக்கிறதுக்கு முதல்ல தலைவர் முன் நிற்கணும். இந்த கட்சியின் தலைமை மாத்திக்காம மக்கள் கிட்ட போதை ஒழிப்ப பேசுறது அது ஒரு பெரிய போலியான ஒரு விஷயமாக நான் பார்க்கிறேன். தன் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாத தலைவர், மக்களுக்குப் போதை ஒழிப்பு பற்றிப் பேசுவது போலித்தனமானது.
4. தவெகவில் எம்எல்ஏ சீட்டுக்கு ரூ.10 முதல் ரூ.15 கோடி வரை புஸ்ஸி ஆனந்த் கேட்கிறாராமே? 234 தொகுதிக்கும் தவெக வேட்பாளர்கள் இல்லை என்ற தகவல் வருகிறதே? பணம், பதவி இருந்ததால்தான் தவெக மரியாதை என தொண்டர்கள் சொல்கிறார்களே? இதெல்லாம் உண்மையா?
சீட் ஒதுக்கீட்டில் பல கோடி ரூபாய் பேரம் பேசப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் நடக்கிறது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டபோது, கட்சி நிதியாக 2 கோடி ரூபாய் வெள்ளைப்பணமாக வழங்க வேண்டும் என்றும், அதன் பிறகு இதர செலவுகள் குறித்துப் பேசலாம் என்றும் புஸ்சி ஆனந்த் தரப்பில் கூறப்படுகிறது. கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லை. நான்கு வெவ்வேறு குழுக்களாகப் பிரிந்து கொண்டு ஆளாளுக்குப் பண வசூல் வேட்டையில் ஈடுபடுகின்றனர். கட்சியின் மேல்மட்ட நிர்வாகம் எந்த ஒரு புகாரிற்கும் முறையான பதில் அளிப்பதில்லை. பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டினால் யாரிடமும் பேச வேண்டாம், போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுங்கள் என்றுதான் அறிவுரை வழங்கப்படுகிறது. எனவே, கட்சியில காசு வாங்குறது 200% உண்மையான ஒரு விஷயம். இதுவரைக்கும் நானே 40 லட்சம் கொடுத்து ஏமாந்து இருக்கேன்.
