×

ஒன்றிய அரசை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஆர்ப்பாட்டம்

துறையூர், மார்ச் 16: திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன், ஒன்றிய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் சிலிண்டர் தட்டுப்பாடை கண்டித்து கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, சிவ.சரவணன், வீரபத்திரன், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், துறையூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சரண்யா மோகன் தாஸ் துறையூர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் அரவிந்தன், ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், தலைமை பொதுக்குழு கிட்டப்பா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

 

Tags : Union government ,Thuraiyur ,Anna Bus Stand ,Thuraiyur, Trichy district ,DMK ,Thuraiyur… ,
× RELATED சமயபுரம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி