×

சமயபுரம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி

சமயபுரம், மார்ச் 16: சமயபுரம் அருகே வாளாடி கிராமம் புதுரோடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). லாரி டிரைவர். இந்நிலையில் நேற்று காலை நம்பர் ஒன் டோல்கேட் செல்ல நேற்று காலை ரஞ்சித்குமார் தனது டூவீலரில் வந்தார். அப்போது லால்குடியில் இருந்து திருச்சி நோக்கி அரசு பேருந்து ஒன்று அதே திசையில் வந்து கொண்டிருந்தது. மேலவாளாடி மேம்பாலத்தில் ரஞ்சித் சென்ற பைக் மீது அரசு பேருந்து மோதியது.

இதில் ராமர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருகில் இருந்தவர்கள் உடனே சமயபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சமயபுரம் போலீசார் ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தை குறித்து வழக்கு பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

Tags : Samayapuram ,Ranjith Kumar ,Valadi village, Pudhurod ,Lalgudi… ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து சிலிண்டருக்கு பாடைகட்டி ஆர்ப்பாட்டம்