×

போலி பாஸ்போர்ட் 2 வாலிபர் கைது

திருச்சி, மார்ச் 12: போலி பாஸ்போர்ட்டில் மலேசியா சென்று வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு மார்ச் 9ம் தேதி விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர் அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கடலடி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை (26), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த உமையர் தங்கம் (31) ஆகியோரது பாஸ்போர்ட்டை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில். போலி ஆவணங்களை சமர்பித்து பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் இருவரையும் ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.

Tags : Trichy ,Malaysia ,Trichy airport ,
× RELATED திருச்சி அருகே மாணவிகளிடம் பாலியல்...